மேலும் செய்திகள்
மும்பைக்கே ராஜாவானாலும்...!
14-Jan-2025
குளித்தலை,: குளித்தலை அடுத்த, பொய்கை புத்துாரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 30, கூலி தொழிலாளி. திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, 2024 செப்., 5ல் தமிழ்ச்-செல்வன் திருமணம் செய்தார். இவரது தந்தை மணி, 42, தாய் மஞ்சுளா, 35, சிறுமியின் தந்தை பாலசுந்தரம், தாய் பாலம்மாள், உறவினர் பழனியாண்டி ஆகியோர் துாண்டுதலின் பேரில், தமிழ்ச்-செல்வன் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்படி, ஆறு பேர் மீது குளித்தலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா-ரித்து வருகின்றனர்.
14-Jan-2025