போலி ஆவணம் மூலம் நிலம் கிரையம் மாஜி பா.ஜ., தலைவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
கரூர், கரூர் அருகே, போலியான ஆவணங்கள் மூலம் நிலத்தை கிரையம் செய்து கொண்டதாக, மாவட்ட முன்னாள் பா.ஜ., தலைவர் உள்பட, ஆறு பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், நெடுங்கூர் என்.பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மனைவி முத்துலட்சுமி, 62; தங்கவேலும், கரூர் மாவட்ட முன்னாள் பா.ஜ., தலைவர் சிவசாமியும் நண்பர்கள். இரண்டு பேரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். இது தொடர்பாக, பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்னை உள்ளது.இந்நிலையில் கடந்த, 2023ல் நெடுங்கூரில் உள்ள, 8.40 ஏக்கர் நிலத்தை, கரூர் மாவட்ட முன்னாள் பா.ஜ., தலைவர் சிவசாமி, 52, அவரது மனைவி நிர்மலா, கரூர் கூடலுார் பகுதியை சேர்ந்த சென்னியப்பன், செந்தில்குமார், பூலாம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர், போலியாக ஆவணங்கள் தயாரித்து, போலி கையெழுத்து மூலம் கிரையம் செய்து கொண்டதாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த, 11ல், தங்கவேலு மனைவி முத்துலட்சுமி புகார் செய்தார்.இதையடுத்து, மாவட்ட முன்னாள் பா.ஜ., தலைவர் சிவசாமி உள்பட, ஆறு பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.