உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொடி கட்டியதாக ஹிந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு

கொடி கட்டியதாக ஹிந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு

கரூர்: ஹிந்து முன்னணி சார்பில், மாநில செயற்குழு கூட்டம், நேற்று கரூரில் வி.என்.சி., மஹாலில் நடந்தது. அதற்காக, கரூர் மனோகரா கார்னர் முதல், திருகாம்புலியூர் வரை சாலையில், ஹிந்து முன்னணி சார்பில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அந்த கொடிகள் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளதாக, போலீஸ் எஸ்.ஐ., மாரிமுத்து புகார் செய்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் ஹிந்து முன்னணி, கரூர் நகர தலைவர் ஜெயம் கணேஷ் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை