பெண்ணுக்கு மிரட்டல் சித்தப்பா மீது வழக்கு
குளித்தலை: குளித்தலை அடுத்த நாகனுாரை சேர்ந்தவர் பூமாதேவி, 34; விவ-சாய தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சித்தப்பா உறவான ராஜேந்திரன், 54, என்பவருக்கும் இடையே நிலத்தக-ராறில் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த அக்., 22 காலை, 9:00 மணிக்கு, பெரியகுளத்துாரில் உள்ள தோட்டத்திற்கு, பூமா-தேவி சென்றார். அப்போது, 'நீ எப்படி இந்த வழியாக வரலாம்' என, ராஜேந்திரன் தடுத்து, தகாத வார்த்தையால் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பூமாதேவி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.