உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார் டயர்களை சேதப்படுத்திய வழக்கு; தலைமறைவாக இருந்த வக்கீல் கைது

கார் டயர்களை சேதப்படுத்திய வழக்கு; தலைமறைவாக இருந்த வக்கீல் கைது

ப.வேலுார்: இரு வக்கீல்கள் இடையே ஏற்பட்ட மோதலில், கார் டயர்களை கிழித்து சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.மதுரை மாவட்டம், மானகிரியை சேர்ந்தவர் செல்வகுமார், 47; வக்கீல். இவர், கடந்த ஜூன், 26ல் ஏற்கனவே ஆஜரான வழக்கு சம்பந்தமாக, அதற்குரிய கட்டணத்தை பெற, ப.வேலுார் வந்துள்ளார். அப்போது, ப.வேலுாரை சேர்ந்த வக்கீல் பாலகுமாருக்கும், மதுரை வக்கீல் செல்வகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, செல்வகுமாரை தாக்க முயன்றதாகவும், ஜாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும், செல்வகுமாருக்கு சொந்தமான கார் டயர்களை, பாலகுமார் கிழித்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க, டி.எஸ்.பி., சங்கீதா உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த, இரண்டு மாதமாக தலைமறைவாக இருந்த வக்கீல் பாலகுமாரை, நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ