பேனர் வைத்த அ.தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு
கரூர்: கரூர் அருகே, அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைத்ததாக, அ.தி.மு.க., கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு பாலம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டாள் தினேஷ் குமார், 37; கரூர் மாநகராட்சி, 11 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் மற்றும் பகுதி செயலாளராக உள்ளார். இவர், அனுமதி பெறாமல் பாலாம்மாள்புரம் பஸ் ஸ்டாப் பகுதியில், கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக, பிளக்ஸ் பேனர் வைத்ததாக, வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., ஆர்த்தி புகார் செய்தார்.இதையடுத்து, வெங்கமேடு போலீசார் அ.தி.மு.க., கவுன்சிலர் ஆண்டாள் தினேஷ் குமார் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.