உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை பகுதிகளில் காவிரி குடிநீருக்கு தட்டுப்பாடு

லாலாப்பேட்டை பகுதிகளில் காவிரி குடிநீருக்கு தட்டுப்பாடு

கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை பகுதிகளில், காவிரி குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் சிரமப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள லாலாப்பேட்டை பகுதியில் கள்ளப்பள்ளி, சிந்தலவாடி ஆகிய பஞ்சாயத்துகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் வழியாக தொட்டியில் நீர் ஏற்றி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக, காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சும் மின்மோட்டர் பழுது ஏற்பட்டு, குடிநீர் வினியோகம் பணியில் பாதிப்பு உள்ளது. இதனால் கள்ளப்பள்ளி, சிந்தலவாடி ஆகிய பஞ்சாயத்து மக்களுக்கு, வாரம் ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது குடிநீர் வினியோகம் நடந்தது. இதையடுத்து நேற்று வரை காவிரி குடிநீர் மக்களுக்கு வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் குடிப்பதற்கு காவிரி நீர் தேவை என்பதால், அருகில் உள்ள மதுரை-மேலுார் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் வழியாக செல்லும் நீரை குடங்களில் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் மின்மோட்டார் பழுதை சரி செய்து, மக்களுக்கு காவிரி நீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை