உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் த.வெ.க., கூட்டம் நடந்த இடத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை

கரூரில் த.வெ.க., கூட்டம் நடந்த இடத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை

கரூர் :கரூர் அருகே, த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த இடத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் இரண்டாவது நாளாக, நேற்று விசாரணையில் ஈடுபட்டனர்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ம் தேதி இரவு த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது. இதில் விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ., எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் கடந்த, 16 முதல் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, 10:45 மணி முதல், மாலை, 5:30 மணி வரை சி.பி.ஐ., அதிகாரிகள் த.வெ.க., கூட்டம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, பிரசார கூட்டம் நடந்த இடம் முதல், ஈரோடு சாலையில் கோதுார் பிரிவு வரை, 500 மீட்டர் துாரம் வரை, 3டி லேசர் அளவீடு கருவி மூலம் ஆய்வு செய்தனர். நேற்று காலை, 7:30 மணிக்கு இரண்டாவது நாளாக சி.பி.ஐ., அதிகாரிகள் வேலுச்சாமிபுரத்தில் மீண்டும் விசாரணையை துவக்கினர். குறிப்பாக, த.வெ.க., தலைவர் விஜய் பிரசார வாகனம் நின்ற இடத்தில், வலது மற்றும் இடது புறத்தில், இரண்டு மணி நேரம், 3டி லேசர் கருவி மூலம் சி.பி.ஐ., அதிகாரிகள், அளவீடு செய்து விசாரணையை மேற்கொண்டனர். மாலை, 4:00 மணிக்கு அளவீடு மற்றும் விசாரணையை முடித்து கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். '3டி., லேசர்' கருவிகரூர் த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக, எஸ்.ஐ.டி., குழு, 'டிவி' சேனல்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட, பல்வேறு வீடியோக்களின் ஆதாரங்களை ஒப்பீடு செய்யும் வகையில், சம்பவ இடத்தில், 3டி., லேசர் கருவி மூலம் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.ஐ.பி.எஸ்., அதிகாரிகள்கரூர் த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை, கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த குழுவில் இடம் பெற்றுள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் விரைவில் கரூர் வர உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி