உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பசுமைப்படை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

பசுமைப்படை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

கரூர்,புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பசுமைப்படை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் ( பொ) யுவராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசின் பசுமைப்பள்ளி திட்டத்தில், புகழூர் பள்ளி தேர்வு செய்யப்பட்டது. பள்ளியில் மூலிகைத் தோட்டம், காய்கறி தோட்டம், பூக்கள் தோட்டம், மழை நீர் சேகரிப்பு திட்டம், செயற்கை ஈர நிலத்தொட்டி, அழிந்த டயனோசர் மாதிரி, சோலார் திட்டம், சூழல் நுாலகம் போன்ற பல்வேறு பசுமை பணிகள் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இதில், பங்கேற்ற பசுமைப்படை மாணவர்களுக்கு பசுமை சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், ஆசிரியர் பாலசுப்பிரமணியன், பசுமைப்படை பொறுப்பாளர் ஜெரால்டு, தேசிய மாணவர் படை அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ