உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அறுவடைக்கு தயார் நிலையில் உளுந்து

அறுவடைக்கு தயார் நிலையில் உளுந்து

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து செடிகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, சேங்கல், மேட்டுப்பட்டி, புனவாசிப்பட்டி, கணக்கம்பட்டி, அந்தரப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி, சரவணபுரம், வயலுார் ஆகிய பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில், விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்துள்ளனர். இந்த சாகுபடிக்கு தேவையான மழை நீர், கடந்த மாதம் பெய்த மழையால் கிடைத்தது. இதன் மூலம் செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து காய்கள் பிடித்து வருகிறது. இதையடுத்து, விளைந்த உளுந்து செடிகளில் அறுவடை செய்யும் பணிகளில் விவசாயி கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை