உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதல்வர் விளையாட்டு போட்டி ஆக., 22ல் துவக்கம்

முதல்வர் விளையாட்டு போட்டி ஆக., 22ல் துவக்கம்

கரூர், முதல்வர் விளையாட்டு போட்டி ஆக.,22 முதல் தொடங்குகிறது.கரூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை போட்டி, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் மாவட்ட அளவில், 53 வகையான போட்டிகளும், மண்டல அளவில், 14 வகையான போட்டிகளும் நடக்கவுள்ளன. போட்டி ஆக., 22 முதல் தொடங்குகிறது. போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஆக., 16க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். https://cmtrophy.sdat.inஅல்லது https://sdat.tn.gov.inஎன்ற இணைய தளத்தில், போட்டிகளில் பங்கேற்பது குறித்தான முழு விபரங்கள் உள்ளன. மேலும் விபரம் பெற, கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை, 74017 03493 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ