உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அபயபிரதான ரெங்கநாத சாமி கோவிலில் மே 1ல் சித்திரை திருவிழா தொடக்கம்

அபயபிரதான ரெங்கநாத சாமி கோவிலில் மே 1ல் சித்திரை திருவிழா தொடக்கம்

கரூர்: பிரசித்தி பெற்ற, அபயபிரதான ரெங்கநாத சாமி கோவிலில், சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நடப்பாண்டு வரும் மே, 1ல் தொடங்குகிறது. 2ல் கொடியேற்றத்தை தொடர்ந்து, நாள்தோறும் இரவு பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்க உள்ளது.வரும், 8ல் திருக்கல்யாண உற்சவம், 10ல் தேரோட்டம், 11ல் அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, 12ல் ஆளும் பல்லாக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி காந்தன், செயல் அலுவலர் இளையராஜா ஆகியோர் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை