மழை நீர் செல்லும் தடத்தில் துாய்மை பணி
கிருஷ்ணராயபுரம், நடுப்பட்டி பகுதியில், மழை நீர் செல்லும் வழித்தடங்களில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு துாய்மை பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி கிராமத்தில், மழை நீர் செல்லும் வழித்தடம் உள்ளது. இதன் வழியாக வயலுார் குளத்திற்கு மழை நீர் செல்கிறது. தற்போது மழை நீர் வடிந்து செல்லும் வழித்தடங்களில், அதிகமான செடிகள் வளர்ந்து வருவதால் மழை காலங்களில் பெய்து வரும் மழைநீர், வழித்தடங்களில் வராமல் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. இதனால் மழை நீர் சேமிப்பு குளத்திற்கு தண்ணீர் செல்வதில் பாதிப்பு இருந்தது.இந்நிலையில் பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு துாய்மை பணி நடந்தது. வழித்தடங்களில் வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன. துாய்மை பணி மூலம் மழை நீர் விரைவாக வடிந்து செல்லும் வகையில் பணிகள் நடந்தன.