தேங்காய், கொப்பரை, எள் ரூ.87.91 லட்சத்துக்கு ஏலம்
கரூர்: சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய். எள் சேர்த்து ரூ.87.91 லட்சத்துக்கு விற்-பனை நடந்தது.கரூர் மாவட்டம் நொய்யல் அருகில் உள்ள, சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 47,797 தேங்காய்-களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்-சமாக, 32.69 ரூபாய், அதிகபட்சமாக, 56.15, சராசரியாக, 53.76க்கு ஏலம் போனது. மொத்தம், 15,379 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 7 லட்சத்து, 68 ஆயிரத்து, 905 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 195.99, அதிகபட்சமாக, 206.19, சராசரியாக, 204.11, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 104.99, அதிகபட்சமாக, 201.42, சராசரியாக, 163.99 ரூபாய்க்கு ஏலம் போனது. 8,011 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 12 லட்சத்து, 61 ஆயி-ரத்து, 556 ரூபாய்க்கு விற்பனையானது.மஞ்சள் வெள்ளை ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 88.90 ரூபாய், அதிகபட்சமாக, 123 ரூபாய், சராசரியாக, 122 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 57,144 கிலோ எடையுள்ள எள், 67 லட்சத்து, 60 ஆயிரத்து, 780 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்-தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 87 லட்-சத்து, 91 ஆயிரத்து, 241 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.