மேலும் செய்திகள்
கரூரில் குறைதீர் கூட்டம்: 413 மனுக்கள் குவிப்பு
12-Nov-2024
கலெக்டர் குறைதீர் கூட்டம்401 மனுக்கள் குவிந்தனகரூர், நவ. 19-கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், ரேஷன் அட்டை, அடிப்படை வசதி உள்பட பல்வேறு தரப்பில் மக்களிடம் இருந்து, 401 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம், 50 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இருவருக்கு, 88 ஆயிரத்து, 400 ரூபாய் மதிப்பில் நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், சப் - கலெக்டர் பிரகாசம், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஸ், மாநகராட்சி கமிஷனர் சுதா, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
12-Nov-2024