உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி பள்ளியில் காலைக்கதிர் நாளிதழின் பட்டம் வாசிப்பு துவக்கம்

அரவக்குறிச்சி பள்ளியில் காலைக்கதிர் நாளிதழின் பட்டம் வாசிப்பு துவக்கம்

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த, காலைக்கதிர் நாளிதழின் பட்டம் உள்ளிட்ட சிறார் இதழ்கள் வாசிப்பு துவக்க விழா நடந்தது.இன்றைய காலகட்டத்தில், மாணவர்களுக்கு வாசித்தல் என்பது மிக அவசியமாக உள்ளது. மாணவர்களுடைய வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் செயல்படும், நாமக்கல்லை சேர்ந்த விதை சிறார் வாசிப்பு இயக்கம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு காலைக்கதிரின் மாணவர் பதிப்பான பட்டம், 125 பிரதிகளும், மேலும் சிறார் இதழ்களான பொம்மி, சுட்டியானை ஆகியவற்றை வழங்கியிருந்தனர்.அதன் வாசிப்பு துவக்க விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் சாகுல் அமீது துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் ஷகிலா பானு, சரசேஸ்வரி, சகாயவில்சன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ