உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஒரே பதிவு எண்ணில் 2 கார் இயக்கம் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு

ஒரே பதிவு எண்ணில் 2 கார் இயக்கம் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையை சேர்ந்த மணிகண்டன் என்பவர், 'தன் காரின் பதிவு எண்ணில், மற்றொரு காரும் பயன்பாட்டில் உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குமாரபாளையம் வட்டார போக்கு வரத்து அலுவலரிடம் அனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான், டி.என்., 34, எம்.பி., 3079, 'ஈகோ மாருதி' வாகனம், கடந்த, 2024 நவ., 14ல் வேறொரு நபரிடம் இருந்து வாங்கி, தற்போது டிராவல்ஸ் வாடகைக்கு பயன்படுத்தி வருகிறேன். இந்நிலையில், என்னுடைய வாகன பதிவு எண் கொண்ட, அதே போன்ற வாகனம், வெப்படை எலந்தகுட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய குழந்தைகள் மற்றும் சிறுவர் நலத்திட்டத்தின் கீழ் போலி பதிவு எண் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, 'மாருதி ஈகோ' டி.என்., 34, எம்.பி., 3079 என்ற பதிவு எண்னை அரசின் மருத்துவ பயன்பாட்டிற்கு இயக்கி வரும் நபர் மீதும், நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை