போக்குவரத்து போலீசார் இல்லாததால் வெங்கமேடு ரயில்வே பாலத்தில் நெரிசல்
கரூர்: வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்தில், போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகி-றது. கரூர்-சேலம் பழைய சாலையில் வெங்கமேடு பகுதியில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. வெங்கமேடு, வெண்ணைமலை, மண்மங்கலம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட, 25க்கும் மேற்-பட்ட கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கரூர் நகருக்கு, ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகின்றனர்.குறிப்பாக, கரூர் நகருக்கு வேலைக்கு டூவீலர்களில் செல்வோரை காலை மற்றும் மாலை நேரங்களில், வெங்கமேடு ரயில்வே மேம்-பாலத்தில் அதிகளவில் காண முடியும். இதனால், அப்பகுதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக காலை, 8:30 முதல், 9:30 மணி வரை வெங்க-மேடு ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள் அதிகளவில் செல்கிறது. நெரிசலை சரி செய்து, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார், பெரும்பாலான நாட்களில் இருப்ப-தில்லை. எனவே, வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்தில் போக்கு-வரத்து நெரிசலை கட்டுப்படுத்த காலை, மாலை நேரங்களில் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்-பார்க்கின்றனர்