மேலும் செய்திகள்
நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி செய்தவர் கைது
09-Jul-2025
கரூர், மகாதானபுரத்தில், ஆசிரியர் வீட்டில் நடந்த திருட்டில் கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டு, 20 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் மகாதானபுரம் அக்ரஹாரத்தில் உள்ள சமஸ்கிருத பாரதி பாஷியம் பயிற்சி மையத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வலிக்கலாம்பாட்டை சேர்ந்த பிரதீப், 46, அவரது மனைவி பரிமளா தேவி ஆகியோர் நிர்வாக பணி செய்தபடி ஆசிரியராக பணிபுரிகின்றனர். அதே பகுதியில் உள்ள ராம்குமார் என்பவர் வீட்டில் குடியிருந்தனர். இந்நிலையில் கடந்த, 22ல் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது, அதிலிருந்த, 20 பவுன் தங்க நகைகளை காணவில்லை. பின், லாலாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கட்டட வேலை செய்த ரவிக்குமார், 45, என்பவர் 20 பவுன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து திருட்டு போன நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.
09-Jul-2025