உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், வெண்ணைமலை தொழிலாளர் நல அலுவலகம் முன், மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ், 5,000 ரூபாய் வழங்க வேண்டும், நலவாரிய பணப்பலன்களை விரைவாக வழங்க வேண்டும், பணப்பலன்களை வழங்குவதில், காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான சங்க அகில இந்திய துணைத்தலைவர் சிங்கார வேலு, மாவட்ட செயலாளர் ராஜா முகமது, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, அரவிந்த், ரங்கராஜன், ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை