கிணற்றில் விழுந்த பசு கன்று மீட்பு
கரூர், புகழூர் அருகே மூலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 55, விவசாயி. இவரது தோட்டத்தில், 70 அடி ஆழ கிணறு உள்ளது. அதே பகுதியை சேர்ந்த, மாசிலாமணி என்பவரின் வீட்டில் இருந்த பசுமாடு கன்று, கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதையடுத்து, புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று, கயிறு மூலம் கிணற்றில் இறங்கி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு உயிருக்கு போராடிய பசு கன்றை மீட்டு, மாசிலாமணியிடம் ஒப்படைத்தனர்.