உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மா.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில், கரூர் வெண்ணைமலை பஞ்., யூனியன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம், செயலாளர் சுப்பிரமணி, கிளை உறுப்பினர் வேலுசாமி உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !