கிரிக்கெட், கைப்பந்து, கூடைப்பந்து போட்டி கரூரில் இன்று ஆரம்பம்
கரூர்:முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், கிரிக்கெட், கைப்பந்து, கூடைப்பந்து போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் இன்று நடக்கிறது.கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இன்று கைப்பந்து போட்டி பள்ளி, கல்லுாரி மாணவியருக்கும், கிரிக்கெட் பள்ளி மாணவ, மாணவியருக்கும், கூடைப்பந்து போட்டி, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நடக்கிறது.இறகுபந்து போட்டி ஆபீசர்ஸ் கிளப் மைதானத்தில் பள்ளி மாணவ,மாணவியருக்கும், செஸ் போட்டி சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெண்ணைமலையில் பள்ளி மாணவ, மாணவியருக்கும் இன்று நடக்கிறது. மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கிரிக்கெட் போட்டி கல்லுாரி மாணவ, மாணவியருக்கும், கூடைப்பந்து திருவள்ளுவர் மைதானத்தில் பள்ளி, கல்லுாரி மாணவி யருக்கும், இறகுபந்து ஆபீசர்ஸ் கிளப் மைதானத்தில் கல்லூரி மாணவ, மாணவியருக்கும், செஸ் போட்டி சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு நடக்கிறது.போட்டியாளர்கள் போட்டி நடக்கும் இடத்திற்கு காலை 7:00 மணிக்கு வந்துவிட வேண்டும். போட்டியாளர்கள் ஆதார் கார்டு நகல், வங்கி பாஸ்புத்தகம் நகல் எடுத்து வர வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் படிப்பதற்கான சான்றிதழ் அல்லது அடையாள அட்டை, அரசு பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களுக்கான அடையாள அட்டை அல்லது அலுவலக கடிதம், மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை, 7401703493 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.