உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறு பாலம் சேதம் ஓட்டுனர்கள் தவிப்பு

சிறு பாலம் சேதம் ஓட்டுனர்கள் தவிப்பு

கரூர், தெற்கு காந்திகிராமத்தில், சிறு பாலம் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர், திருச்சி சாலையில் தெற்கு காந்திகிராமம் ஸ்டேட் வங்கி அருகில் பிரிவு சாலை செல்கிறது. சாலையின் குறுக்கே, மழைநீர் வடிகால் தண்ணீர் செல்ல வசதியாக சிறுபாலம் உள்ளது. பாலத்தின் மேல் பகுதி சேதமடைந்துள்ளது. இணைப்பு சாலையில் போடப்பட்ட, சிமென்ட் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால், கான்கிரீட் கம்பிகள் வெளியில் நீட்டி கொண்டுள்ளன. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் சிறுபாலத்தில் தவறி விழுவோருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. டூவிலர்களின் டயர்கள் பஞ்சராகி வருகிறது. எனவே, சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !