மேலும் செய்திகள்
மனைவி மாயம்: கணவர் புகார்
12-Sep-2026
தந்தை மாயம்; மகன் புகார்
19-Sep-2026
குளித்தலை:குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., பாலசமுத்திரப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 52. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் ரஞ்சனா, 19, தரகம்பட்டி அருகே தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி வழக்கம் போல், ஊரில் இருந்து பஸ்சில் கல்லுாரி சென்றவர், பின்னர் மாலையில் வீட்டுக்கு வரவில்லை. சக மாணவியரிடம் விசாரித்த போது, வளையப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கி, அவரது தாத்தா வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றதாக தெரிவித்தனர். ஆனால் அவர் தாத்தா வீட்டிற்கும் செல்லவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தந்தை கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
12-Sep-2026
19-Sep-2026