ரங்கநாதர் சுவாமி கோவிலில் 2ம் நாள் பகல் பத்து உற்சவம்
கரூர்: கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, இரண்-டாவது நாள் பகல் பத்து உற்வசம் நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று இரண்டாம் நாள், பகல் பத்து உற்சவம் நடந்தது. நேற்று ஆங்கில புத்தாண்டு என்பதால், ஏராளமான பக்-தர்கள் சுவாமியை வழிபட்டனர். வரும், 9ல் மோகினி அலங்-காரம், நாச்சியார் திருக்கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பா-லிப்பார். 10 அதிகாலை, 4:30 மணிக்கு பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.