உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்: இந்திய தொழிற்சங்க மையம், கரூர் மாவட்ட கிளை (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மின்சார துறையை அதானிக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், உத்திர பிரதேசத்தில் மின்சார துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும், தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் தனபால், சுப்பிரமணியன், நெடுமாறன், ஈஸ்வரன், ராஜா முகமது, சரவணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !