மேலும் செய்திகள்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
30-May-2025
கரூர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை, அரசே ஏற்று நடத்த வேண்டும், 5,000 ரூபாய்க்கு மேல், அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைக்கும், காப்பீடு திட்டத்தில் செலவினத்தை ஏற்க வேண்டும், மெடி அசிஸ்ட் மெட் இன்டியா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் புதுப்பிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம் உள்பட பலர் பங்கேற்றனர்.
30-May-2025