முன்னாள் படை வீரரின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு
முன்னாள் படை வீரரின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்புகரூர், செப். 25--முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுதாரர்கள், பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பங்களுக்கு, முதலாமாண்டு தொழிற்கல்வி பயிலும் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுதாரர்கள் குறைந்தபட்சம் பிளஸ் 2வில், 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். www.ksb.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விபர குறிப்பின்படி விண்ணப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் நவ., 30 ஆகும்.விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி, முன்னாள் ராணுவ வீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.