உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வளர்ச்சி திட்டப்பணி: கரூர் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப்பணி: கரூர் கலெக்டர் ஆய்வு

கரூர்:கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை, கலெக்டர் முத்துக்குமரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதில், காதப்பாறை பஞ்., சண்முகா நகரில், 3.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, லட்சுமி நகர் பகுதியில், 17.22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 330 மீ., நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணி ஆகியவற்றை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.மேலும், மண்மங்கலம் பஞ்., பொதுமக்கள் பயனடையும் வகையில், 2.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள். 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நன்னியூர் பஞ்., புதிய சமுதாயகூடம் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி