உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செல்லாண்டியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

செல்லாண்டியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

குளித்தலை, குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., பேரூர் உடையாபட்டியில் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தாண்டு சித்திரை திருவிழா, கடந்த வாரம் கம்பம் நடப்பட்டு, முக்கிய நிர்வாகிகளுக்கு பூசாரிகள் காப்பு கட்டினர். அன்று முதல் இப்பகுதி மக்கள் செல்லாண்டியம்மனுக்கு, ஏழு நாட்கள் விரதம் இருந்து வழிபட்டு வந்தனர்.முதல் நாள் திருவிழா கடந்த, 7 இரவு அம்மனுக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின், கரகம் சிறப்பு அலங்காரத்தில் தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் வீதி உலா வந்து கோவிலில் குடி புகுந்தது.பின், பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செய்து வழிபட்டனர்.நேற்று முன்தினம் காலை படுகளம் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டுடன் செல்லாண்டியம்மன் கரகம் மற்றும் கம்பம் ஆகியவற்றை கங்கை கரைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு சுவாமிக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடத்தி வைத்து விழாவை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ