உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே காவிரியாற்றில் பேரிடர் மீட்பு பயிற்சி முகாம்

கரூர் அருகே காவிரியாற்றில் பேரிடர் மீட்பு பயிற்சி முகாம்

கரூர் அருகே காவிரியாற்றில் பேரிடர் மீட்பு பயிற்சி முகாம்கரூர், அக். 5-கரூர் அருகே, காவிரியாற்றில் புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில், பேரிடர் மீட்பு பயிற்சி முகாம் நடந்தது.வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழகம் முழுவதும் முன்னேற்பாடுகளை அரசு எடுத்து வருகிறது. கரூர் அருகே, கட்டிப்பாளையம் காவிரியாற்றில், புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில், பேரிடர் மீட்பு பயிற்சி முகாம் நடந்தது.அதில், வெள்ளப்பெருக்கின் போது, சிக்கி கொள்ளும் ஆட்களை காப்பாற்றும் முறை, முதலுதவி சிகிச்சை முறைகள், வீடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றும வழிமுறை, மின்னல் தாக்கும் போது, காத்துக் கொள்ளும் உத்திகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.முகாமில் புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை