லாரிகளை சாலையில் நிறுத்துவதால் இடையூறு
அரவக்குறிச்சி, பவித்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர், பவித்திரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வந்து பஸ்களில் ஏறி கரூர் உள்ளிட்ட மற்ற இடங்களுக்கு சென்று வருகின்றனர். ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில், சென்று வருகின்றனர்.இந்நிலையில், தினமும் பீக் ஹவர்ஸ் நேரங்களில் பவித்திரம் மேடு பஸ் நிறுத்தம் முதல் கடைவீதி வரை உள்ள, தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகள் மற்றும் பிற நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுனர்கள் நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது.பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் லாரி ஓட்டுனர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.