அ.தி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கல்
கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், புரட்டாசி நான்காவது சனிக்கிழமையையொட்டி, அன்னதானம் வழங்கும் விழா, தான்-தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் அருகே, தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.அதில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சரு-மான விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில், மாவட்ட துணை செயலர் மல்லிகா, ஜெ., பேரவை செயலர் நெடுஞ்செழியன், பகுதி செயலர்கள் சக்திவேல், சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.