உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்

அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்

கரூர், கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், திருமாநிலையூர் பகுதியில், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில், கரூர் சட்டசபை தொகுதி மத்திய தெற்கு பகுதி, 36வது வார்டுக்குட்பட்ட பூத் எண், 201, 202க்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதில் கடந்த, 2011-2021 வரை அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், 10 ஆண்டு களில் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது. அப்போது, பகுதி செயலர் சேரன் பழனிசாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலர் ரங்கராஜ், அவைத்தலைவர் சம்பத் குமார், வார்டு செயலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை