உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்ட ஓய்வூதியர் தின விழா

மாவட்ட ஓய்வூதியர் தின விழா

குளித்தலை: குளித்தலை, காவேரி நகர் கிராமியம் கூட்டரங்கில், நேற்று காலை, 11:00 மணிக்கு, தமிழ்நாடு மாநில பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில், ஓய்வூதியர் தின விழா நடந்தது. மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் மூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர்கள் ஞானவேல், மூக்கன், ராஜமாணிக்கம், வேலுச்சாமி, கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் மாயவன் வரவேற்று, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், கிராமியம் நாராயணன், திருச்சி மாவட்ட தலைவர் சண்முகநாதன், கரூர் மாவட்ட இணை செயலாளர் ஜெயமூர்த்தி ஆகியோர், சங்க செயல்பாடு குறித்தும், சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு சமூக சேவைகள் செய்வது குறித்தும் பேசினர். விழாவில், 30க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் தர்மராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை