மேலும் செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
23-Jul-2025
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று தெய்வ திருமண விழா நடந்தது.கரூர் ஸ்ரீ மகா அபி ேஷக குழு சார்பில், 27வது தெய்வ திருமண விழா, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் காலை கொடி மரம் பூஜை மற்றும் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நாட்டியாஞ்சலி, தேவாரா இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, மாலை முளைப்பாரி மற்றும் சீர்தட்டு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.நேற்று காலை, 6:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபி ேஷகம், 8:00 மணிக்கு மங்கள இசை, 10:30 மணிக்கு கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி சமேத சவுந்திரநாயகி திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, பரணி பார்க் பள்ளி மாணவர்களின் தேவாரம், தமிழ் பண்ணிசை நிகழ்ச்சி, பசு கண்ட பசுபதீசன் என்ற தலைப்பில் ஆன்மிக உரை, கரூரின் பெருமை என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
23-Jul-2025