உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொலை வழக்கில் தி.மு.க., நிர்வாகி கைது

கொலை வழக்கில் தி.மு.க., நிர்வாகி கைது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே தடாகோவில் பகுதியை சேர்ந்த தண்ட-பாணி, 49, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த ஜூன், 1ம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த போது இதே பகுதியை சேர்ந்த முன்னாள் புங்கம்பாடி ஊராட்சியின் தலைவரும், தி.மு.க., நிர்வாகியுமான தனுஷ்கோடி என்பவர், தண்-டபாணியை கடுமையாக தாக்கியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன், 4-ம் தேதி உயிரிழந்தார்.இந்த கொலை சம்பவத்தை, அரவக்குறிச்சி போலீசார் சாலை விபத்து என மாற்றி வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் கரூர் எஸ்.பி., அலுவலகத்திற்கு, இவ்வழக்கு கொலை வழக்கு என எந்த பெயரும் எழுதாமல் கடிதம் வந்துள்-ளது. இதன் அடிப்படையில் போலீசார் 'சிசிடிவி' கேமராக்கள் மூலம் விசாரணை நடத்திய போது, கொலைதான் என உறுதியா-னது.மேலும் திருச்சி அருகே லால்குடியில் தலைமறைவாகி இருந்த தனுஷ்கோடியை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சாலை விபத்து என பதிந்த வழக்கு, கொலை வழக்காக மாறி கொலையாளி கைது செய்யப்பட்டிருப்பது அரவக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை