தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று காலண்டர் வினியோகம்
அரவக்குறிச்சி: கரூர் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உத்தரவின்படி, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட நகர மற்றும் ஒன்றிய பகுதிகளில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தலைமையில் கட்சியினர் வீடு, வீடாக சென்று காலண்டரை வினியோகம் செய்தனர். நகர செயலாளர் மணி, மேற்கு ஒன்றிய செயலாளர் மணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கடவூரில் நாளை உங்களை தேடிஉங்கள் ஊரில் திட்ட முகாம்கரூர்: கடவூர் தாலுகாவில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டம், கடவூர் தாலுகாவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம், நாளை (18ம் தேதி) நடக்கிறது. மைலம்பட்டி மற்றும் கடவூர் ஆகிய இரண்டு குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடைபெறும் முகாம்களில், பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.