மேலும் செய்திகள்
தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
11-Nov-2024
கரூர்: கரூர் மாவட்டம், தென்னிலை கடைவீதியில், தி.மு.க., க.பரமத்தி மேற்கு ஒன்றியம் சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தலைமை வகித்தார். கட்சியில் கூடுதல் உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.கூட்டத்தில், மாவட்ட பிரதிநிதி மோகன், பொதுக்குழு உறுப்பினர் கலாவதிசக்திவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நவீன்ராஜ், துணை செயலாளர் நல்லசிவம், அவைத்தலைவர் துரைசாமி, பொருளாளர் ரகுநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
11-Nov-2024