உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் தி.மு.க., துாய்மை பணியாளர்கள் போராட்டம்

கரூரில் தி.மு.க., துாய்மை பணியாளர்கள் போராட்டம்

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தி.மு.க., துாய்மை பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிரா-மத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ-மனை அலுவலகம் முன், தி.மு.க., தொ.மு.ச.,வின் தமிழக மருத்துவமனை துாய்மை பணியா-ளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் சுந்திரமூர்த்தி தலைமை வகித்தார். தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில், 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரி-கின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, முறையான சம்பளம் எவ்வளவு என்று தெரிவிக்-கப்படவில்லை. தொடர்ந்து, 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்-ளனர் இதை சரி செய்ய வலியுறுத்தி, 35க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், கரூர் பசுபதிபாளையம் போலீசார், அரசு மருத்துவ கல்லுாரி நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி