உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தி.மு.க.,விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மண்டல அளவில் கபடி

தி.மு.க.,விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மண்டல அளவில் கபடி

கரூர், கரூர், வ.உ.சி., தெருவில் உள்ள மைதானத்தில் தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் கரூர் மத்திய கிழக்கு இளைஞரணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு கொங்கு மண்டல அளவிலான கபடி போட்டி நடந்தது. இப்போட்டியை, தி.மு.க., கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.போட்டியில் தோட்டக்குறிச்சி தங்கம் பிரதர்ஸ் முதலிடம், கரூர் வ.உ.சி., கபடி குழு இரண்டாமிடம், கரூர் காந்திகிராமம் சந்தோஷ் ஸ்போர்ட்ஸ் மூன்றாமிடம், நாமக்கல் வெங்கரை கரிகாலன் நினைவு கபடி குழு நான்காமிடம் பெற்றனர். போட்டியில் வெற்றி அணிகளுக்கு கரூர் மாநகராட்சி மண்டல தலைவரும், தி.மு.க., மாநகர மத்திய கிழக்கு பகுதி செயலருமான ராஜா பரிசு வழங்கினார். கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆலயம் ரமேஷ், கரூர் மாநகர பிரதிநிதி வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி