மேலும் செய்திகள்
மகப்பேறு ஆலோசனை நாளை மருத்துவ முகாம்
21-Sep-2024
டி.என்.பி.எல்., மருத்துவ முகாம்: 656 பேருக்கு சிகிச்சைகரூர், செப். 25--புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் நடந்த மருத்துவ முகாமில், 656 பேர் சிகிச்சை பெற்றனர்.கரூர் மாவட்டம் புகழூர் டி.என்.பி.எல்., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. இதில், முதன்மை பொது மேலாளர் (இயக்கம்) நாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.தனியார் மருத்துவமனையைச் சார்ந்த, 16 சிறப்பு டாக்டர்கள் குழுவினர், இருதயம், நரம்பு, கல்லீரல், சிறுநீரகம், சர்க்கரை நோய், கால் நரம்பு சுருள், எலும்பு, நுரையீரல், முடக்குவாதம், மகப்பேறு, கர்ப்பப்பை, பொது மருத்துவம் மற்றும் தோல் நோய் போன்ற அனைத்துவித நோய் அறிகுறிகளுக்கும் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., பி.எம்.டி. பி.எப்.டி. பைப்ரோ ஸ்கேன் ஆகிய பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆலை சுற்றி உள்ள பகுதியில் இருந்து, 656 பேர் சிகிச்சை பெற்றனர். முகாமில், பொதுமேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.
21-Sep-2024