உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்கால் துாய்மை பணி தீவிரம்

வாய்க்கால் துாய்மை பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் பகுதியில் நெல், சோளம், உளுந்து ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மாயனுார் கட்டளை வாய்க்காலில் இருந்து பிரிந்து, கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் வழியாக வந்து காட்டுவாரி கிளை பாசன வாய்க்காலில் தண்ணீர் கொண்டு வந்து விவசாய நிலங்களுக்கு செல்கிறது. இந்நிலையில் காட்டுவாரி பாசன வாய்க்காலில் அதிகமான நாணல் செடிகள் வளர்ந்ததால், தண்ணீர் செல்வதில் பாதிப்பு இருந்தது. இதையடுத்து, நீர்வளத்துறை சார்பில் பொக்லைன் இயந்திரம் கொண்டு துாய்மை பணி நடந்தது. இதில் பாசன வாய்க்காலில் வளர்ந்த நாணல் செடிகள் அகற்றப்பட்டது. மேலும் பாசன வாய்க்காலில் தண்ணீர் தங்கு தடையின்றி, விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !