உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

குளித்தலை:குளித்தலை அடுத்த கிருஷ்ணராயபுரம் மலையப்ப நகரை சேர்ந்தவர் இளையராஜா, 47; சமையல் தொழிலாளி. இவரது மகன் திருமூர்த்தி, 23; டிரைவர். இவர், கிருஷ்ணராயபுரம் செந்தில் என்பவருக்கு சொந்தமான அமுதன் டிரேடர்ஸ் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை, 12:00 மணிக்கு, கம்பெனியில் உள்ள ஹாலோ பிளாக் இயந்திர பிளக்கை பிடுங்கியபோது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.இதில், மயக்கமடைந்த திருமூர்த்தியை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், திருமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது தந்தை இளையராஜா கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி