வாங்கல்-மோகனுார் பாலத்தில் எரியாத மின் விளக்குகளால் ஓட்டுனர்கள் பீதி
கரூர்: வாங்கல் - மோக னுார் இடையே, காவிரி-யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில், பெரும்பாலான மின் விளக்குகள் எரி-யாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் பீதியில் செல்கின்றனர்.கரூர் மாவட்டம் வாங்கல், நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதிகளை இணைக்கும் வகையில் கடந்த, 2006-11ல் தி.மு.க., ஆட்சியின் போது பணிகள் துவக்கப்பட்டது.பிறகு, அ.தி.மு.க., ஆட்சி மாறிய நிலையிலும், பாலம் கட்டும் பணிகள் தொடர்ந்து நடந்தது. இறு-தியாக, 43 கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட, உயர்மட்ட பாலத்தை கடந்த, 2015 பிப்., 14ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பாலத்தை கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வரு-கின்றனர்.இந்நிலையில், பாலத்தில் ஒரு பக்கம் மின் விளக்குள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், தற்-போது பெரும்பாலான விளக்குகள் எரியாத நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்தில் செல்-கின்றனர்.எனவே, வாங்கல்-மோகனுார் பாலத்தில் சேதம-டைந்துள்ள மின் விளக்குகளை சரி செய்து, எரியும் வகையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நட-வடிக்கை எடுக்க வேண்டும்.