உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் புதிய அமராவதி பாலத்தில் சாலை சேதத்தால் ஓட்டுனர்கள் அவதி

கரூர் புதிய அமராவதி பாலத்தில் சாலை சேதத்தால் ஓட்டுனர்கள் அவதி

கரூர், புதிய அமராவதி பாலத்தில் சாலை சேதமடைந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியிலிருந்து, திருமாநிலையூர் இடையே அமராவதி ஆற்றில் புதிய பாலம் வழியாக, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது திருமாநிலையூரில், புதிய பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்டு வந்த பின், இந்த பாலத்தில் போக்குவரத்து அதிகரித்து உள்ளது. புதிய பாலத்தை மேம்படுத்தும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு, இருவழி போக்குவரத்து நடந்து வருகிறது. இதில், திருமாநிலையூர் பகுதியிலிருந்து, லைட்ஹவுஸ் பகுதியை நோக்கி வரும் பாலத்தின் சாலை மிகவும் குறுகலாக இருந்ததால், அணுகு சாலையை இடித்து விட்டு மேலும் விரிவுபடுத்தப்பட்டது.அணுகு சாலையை சமன்படுத்தாமல் இணைக்கப்பட்டுள்ளதால், தார் பூசப்பட்ட பகுதியின் இடதுபுறம் மேடாகவும், வலது புறம் பள்ளமாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும், பாலத்தில் உள்ள சாலை பல இடங்களில் சேதமடைந்து உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் செல்லும் போது சாலை பள்ளம், மேடு காரணமாக நிலை தடுமாறி விழுகின்றனர். பெரிய விபத்துகள் ஏற்படும் முன், பாலத்தில் உள்ள சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி