உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழை காரணமாக பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மழை காரணமாக பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மழை காரணமாக பெ.ஆ., கோவில்தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரிப்புகரூர், நவ. 19-கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 1,217 கன அடியாக இருந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 87.01 கன அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 158 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று முன்தினம், 243 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால், ஆற்றுப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 446 கன அடியாக அதிகரித்தது.மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 7,655 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 6,435 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு, 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.பொன்னனியாறு அணைகரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள பொன்னனியாறு அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 33.71 அடியாக இருந்தது. அணை பகுதிகளில், 2.6 மி.மீ., மழை பெய்தது.மழை நிலவரம் (மி.மீ.,)கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம்: (மி.மீ.,) கரூர், 1, அரவக்குறிச்சி, 2, க.பரமத்தி, 1, கிருஷ்ணராயபுரம், 5, பஞ்சப்பட்டி, 2.60, கடவூர், 8 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ