உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் மீது கார் மோதி முதியவர் பரிதாப பலி

பைக் மீது கார் மோதி முதியவர் பரிதாப பலி

கரூர் பைக் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் புஞ்சைகாளக்குறிச்சி எல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் மணி, 60. இவர், நேற்று முன்தினம் நொய்யல் - க.பரமத்தி சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, கிரஷர் மேடு அருகில் எதிரே வந்த கார் மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !