உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஈசநத்தம் சாலையில் மின்விளக்கு தேவை

ஈசநத்தம் சாலையில் மின்விளக்கு தேவை

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் இருந்து, ஈசநத்தம் செல்லும் சாலையில் போதிய மின் விளக்குகள் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் அதிக-ளவு காடுகள் நிறைந்துள்ளன. இதனால் இந்த சாலையில், ஆங்-காங்கே குறிப்பிட்ட துாரம் வரை மின் வசதி இல்லாமல், மிக குறைவான அளவில் மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் சாலை விபத்து நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே விபத்துகளை கட்-டுப்படுத்தும் வகையில், அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் கூடுதல் மின் விளக்குகளை ஏற்படுத்தி தர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி, சாலையை பார்வையிட்டு மின் விளக்குகள் அமைப்பதற்கான ஏற்-பாடுகளை, விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்-டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை